படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை டிஸ்மிஸ் செய்யலாம்: ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை பள்ளிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெருங்குடி அருகே கந்தன் சாவடியில் கடந்த, 10ம் தேதி நடைபெற்ற விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட் ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும்.இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பேருந்து படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின்பெற்றோருக்குதெரியப்படுத்த வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, புதன்கிழமை முதலே அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்றைய தினம் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+