அமெரிக்கா ஆரம்பபள்ளியில் துப்பாக்கிச்சூடு: 27 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

USA Flag
கனெக்டிக்கட்: அமெரிக்காவில் கனெக்டிக்கட் என்ற இடத்தில், ஆரம்ப பள்ளிக் கூடத்திற்குள் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனெக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹூக் என்ற ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் தன் கையில் நான்கு துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும், அவன் சுட்டதில் சம்பவ இடத்தில் 18 குழந்தைகளும் 7 பெரியவர்களும் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரு குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவரிடம் நான்கு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அவனது பெயர் ஆடம் லன்ஷா என்றும் 20 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் தாயார் சாண்டிஹூச் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், உயிரிழந்த குழந்தைகளைப் பார்த்து கதறி அழுதனர்.

ஒபாமா கண்டனம்

பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் தனது இதயமே உடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளிக்குள் சாத்தான் புகுந்துவிட்டது என்று இந்த சம்பவம் பற்றி கனெக்டிக்கட் கவர்னர் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் 69 பேர் மரணம்

அமெரிக்காவில் பொது இடங்களில் மன நோயாளிகளைப் போல திடீரென கூட்டத்தை நோக்கி கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுடும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டுவரை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 69 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மின்னசோட்டா மாகாணத்தில் உல்ள ரெட் லேக் நகரில் 16 வயது பள்ளி மாணவனான ஜெஃப்ரி வெய்ஸ், வீட்டில் இருந்த தனது தாத்தா மற்றும் அவரது உதவியாளரைச் சுட்டுக் கொன்றான். பின்னர் பள்ளிக்குச் சென்று அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டதில் 5 மாணவர்கள், ஒரு ஆசிரியை, ஒரு பாதுகாவலர் உள்ளிட்ட 8 பேர் இறந்தனர். 7பேர் காயமடைந்தனர்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி உதா மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் 18 வயதான சுலேமன் என்கிற இளைஞர் கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டில் ஏப்ரல் 17-ம் தேதி வர்ஜீனியா டெக் பல்கலைக் கழகத்தின் வகுப்பறையில் சோ-சியூங் என்ற மாணவர் சரமாரியாகச் சுட்டதில் 32 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு இறந்தார் சோ சியூங். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இது.

அதே ஆண்டில் டிசம்பர் 5-ம் தேதி ஒமாகா நகரிலுள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவத்தில் ராபர் ஹாக்கின்ஸ் என்ற 19 வயது இளைஞர் 8 பேரைச் சுட்டுக் கொன்றார்

2008-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக வகுப்பறையில், முன்னாள் மாணவர் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி பர்மங்காம்டன் குடியேற்றக் கல்வி மையத்தில் வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் கண்மூடித் தனமாகச் சுட்டதில் 11 பேர் பலியாகினர்.

2012ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கனெக்டிக்கட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹூக் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+