வீட்டுப்பாடம் செய்ய மறந்த மாணவனுக்கு 50 மாணவர்களை விட்டு அறை.. ஆசிரியை டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவனின் கண்ணத்தில் 50 முறை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை கொடுத்த ஆசிரியை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி ஆசிரியை லூ யாலி(22). இவரது வகுப்பில் சில நாட்களுக்கு முன்பு 12 வயது மாணவன் ஒருவன் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்தான். அவனை தண்டனை கொடுப்பதற்காக வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார் யாலி. அனைவரும் வரிசையாக வந்து ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த மாணவன் கன்னத்தில் ஒரு அறை கொடுங்கள் என்று கூறினார். பயந்து போன மாணவர்கள் அனைவரும் ஆசிரியை சொன்னபடி வரிசையாக வந்து மாணவன் கன்னத்தில் அறைந்தனர்.

இதில் அந்த மாணவனின் கண்ணம் கன்றிப்போனது. மாணவனின் பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மாணவனின் காதும், மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த ஆசிரியை மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், 50 மாணவர்களையும் அடிக்க சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாணவனின் பாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+