குஜராத்தில் தாய்மாமனால் கற்பழிக்கப்பட்டு முற்புதரில் வீசப்பட்ட 2 வயது குழந்தை பலி
வதோதரா: குஜராத்தில் தாய்மாமனால் கற்பழிக்கப்பட்டு முற்புதரில் வீசப்பட்ட 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் நகரில் நேபாளைத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது பெண் குழந்தையை அதன் தாய் மாமனே கற்பழித்துவிட்டு முற்புதரில் வீசிச் சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று முற்புதர் ஒன்றில் 2 வயது குழந்தை கிடந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர் அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே குழந்தையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து இந்த கொடூரச் செயலை செய்த தாய் மாமன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் மாமன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் குழந்தையை சீரழித்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த தம்பதி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹலோல் நகரில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications