மணியாச்சி போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவி புனிதா உயிர் பறிபோயிருக்காது

மணியாச்சி அருகேயுள்ள பாறைக்குட்டத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். சுப்பையா சரிவர வேலைக்கு செல்லாமல் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விடுவார். இவருக்கும் பாறைக்குட்டத்தில் உள்ள சித்தப்பா தங்கப்பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. தங்கப்பாண்டியனின் மகள் பூர்ணகலாவின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் சுப்பையா பூர்ணகலாவை அவதூறாக பேசி கல்லால் தாக்கினார். இதுகுறித்து மணியாச்சி போலீசார் விசாரணை நடத்தி சுப்பையாவை கைது செய்தனர். கடந்த 14ம் தேதி ஜாமீனில் வந்த சுப்பையா பூர்ணகலாவிடம போலீசில் புகார் செய்ததால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அரிவாளால் வெட்டினார். இதனை தடுத்த தங்கப்பாண்டி, அவரது மனைவி தாய்யம்மாளுக்கும் வெட்டு விழுந்தது.
காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மணியாச்சி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சுப்பையாவை தேடி வந்தார்.
இதனால் சுப்பையா செய்துங்கநல்லூர் அருகேயுள்ள தாதன்குளத்திலுள்ள அண்ணன் வீட்டுக்கு செல்ல கடந்த 19ம் தேதி அவர் நெல்லையிலிருந்து இரவில் குடித்து விட்டு ரயில் ஏறி தாதன்குளத்திலுள்ள ரயில் நிலையத்திலேயே தூங்கி விட்டார்.
இந்த நிலையில், காலையில் தண்டவாளத்தில் தனியாக சென்ற மாணவி புனிதாவை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்றார். இதுகுறித்து செய்துநங்கநல்லூர் போலீசார் விசாரித்து அவரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பழைய வழக்குகளுக்காக சுப்பையாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவில்பட்டி கோர்ட்டில் மனு செய்தனர். அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து மணியாச்சி போலீசார் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதில் என்னை போலீசில் புகார் செய்ததால் பூ்ர்ணகலாவை வெட்டினேன். அதனை தடுத்த சித்தப்பா தங்கப்பாண்டியன், சித்தி தாயம்மாளையும் வெட்டினேன் என்று கூறினார்.
தங்கை, சித்தப்பா, சித்தியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மணியாச்சி போலீசார் சுப்பையாவை கைது செய்திருந்தால் மாணவி கொலை நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications