பயங்கரவாத எதிர்ப்பு- இந்தியாவுக்கு பயிற்சி கொடுக்கிறாராம் இலங்கை கோத்தபாய
கொழும்பு: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும், பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கைக்கு கடந்த மாதம் 20-ந் தேதி சென்றிருந்த இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங், கோத்தபாய ராஜபக்சவை நேரில் சந்தித்துப் பேசியபோது இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குரித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு கருத்து தெரிவித்த கோத்தபாய, "இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் சமீபத்தில் இலங்கை வந்தபோது இதனை நான் தெரிவித்திருந்தேன்" என்று கூறியுள்ளார்.
"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் பயிற்சி மட்டுமன்றி, பயிற்சி திட்டம் ஒன்றையும் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். இந்தப் பயிற்சிகளை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாங்கள் முன்வந்துள்ளோம்.. இந்தியாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்க முடியும். இது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவேண்டியது இந்திய ராணுவத் தளபதிதான்" என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
மேலும் "இந்தியாவில் அரசியல் நெருக்கடி நிலவிய போது இந்திய ராணுவத்துடன் நல்லுறவை பேணி வந்துள்ளோம். இந்திய ராணுவத்துக்கு பயிற்சி வழங்குவது என்றால், அது கூட்டுப் பயிற்சியாகவே இருக்கமுடியும்" என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications