நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும்: வைகோ

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அரசிதழில் நடுவர்மன்ற தீர்ப்பை வெளியிட தயக்கம் காட்டுவது ஏன்?. கேரள மாநிலம் உருவாக்கி கொடுத்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயலுகிறது. அதை நிறைவேற்றினால் தமிழகத்துக்கு மிகப்பெரிய கேடு விளையும். தேச ஒற்றுமைக்கும் உலை வைக்கும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் துரோகம் செய்துள்ளது.
தமிழகத்தை இப்போது மிகவும் அச்சுறுத்திக் கொண்டு இருப்பது மது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஸ்ரீவைகுண்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, இவை அனைத்திற்கும் மதுதான் காரணம்.
எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். இதற்காக ம.தி.மு.க. போராடி வருகிறது. நான் நடத்திய நடைபயணத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் குமுறிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.
ஈழப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5-ந்தேதி மராத்தி மொழியில் வெளியிடுகிறோம். இதில் ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். அடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடுகிறோம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும் என்று தெரிவித்தார் வைகோ.
எந்தக் கூட்டணி சார்?!












Click it and Unblock the Notifications