புதுவை பாலியல் பலாத்கார சம்பவம்- போலீஸ் அலட்சியம் என புகார்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி காணாமல் போனதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
திருபுவனை அருகே கொத்தபுரி நத்தத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி புத்தாண்டு நாளில் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து திருபுவனை மற்றும் வில்லியனூர் போலீஸ் நிலையங்களில் அவரது பெற்றோர் புகார் கொடுத்திருக்கின்றனர். ஆனால் போலீசார் இது பற்றி எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
இந்தநிலையில்தான் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்த மாணவி பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பின்னர் காரில் அழைத்துச் செல்லப்பட்ட்டிருக்கிறார்.
மாணவி காணவில்லை என்று புகார் கொடுத்த போதே போலீசார் துரிதமாக விசாரணை செய்திருந்தால் இத்தகைய துயர சம்பவம் நடந்திருக்காது என்று மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
இதே கருத்தை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் கூறியிருக்கிறார். அலட்சியமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications