தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி செய்யும் காங்கிரஸ் அரசு: வைகோ குற்றச்சாட்டு

ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்' என்ற நூலும், குறுந்தட்டும் மராத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டுவிழா சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற உள்ளது. இது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் வைகோ பேசியதாவது:
மத்திய பிரதேசத்திற்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோதே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை இந்தியா முழுவதும் உணரச்செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். இதனையடுத்து இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனை பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளியிட்டார். தற்போது மராத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் சனிக்கிழமையன்று மும்பையில் ராம் ஜெத்மலானி தலைமையில் வெளியிடப்பட உள்ளது.
இலங்கை அரசு தமிழ் இனத்தையே கொன்று குவித்துள்ளது. சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். தமிழர்களை கொன்று குவிக்கும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா ராணுவ உதவி செய்வது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், அம்மாநில மொழிகளில் நூலையும் குறுந்தட்டையும் தயாரித்து, ஈழத் தமிழர் கொடுந்துயரை இந்தியாவிலே உள்ள பல்வேறு தேசிய இன மக்களிடமும் இதுபற்றிய உண்மைகளை அறியச் செய்து, தமிழ் ஈழ விடியலுக்குப் பாடுபட மதிமுக உறுதி பூண்டு உள்ளது என்றும் வைகோ கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications