'கறுப்புப் பொங்கலாக' கடைபிடிப்போம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுடனும் மற்றும் அண்டை மாநிலங்களோடும் சுமூகமான நட்புறவின் மூலம் விவசாயிகளுக்கும், தொழில் புரிவோருக்கும் உரிய நேரத்தில் உதவிகளை பெற்றுத்தரவேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால், காவிரி தண்ணீர் பெற்றுத்தராத காரணத்தினால் தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்முனை மின்சாரம் எங்கே?
இந்த ஆண்டு சம்பா மற்றும் குறுவை சாகுபடியில் பயிர்கள் கருகிய நிலையில் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் துயர் துடைக்க இந்த அரசு முன் வரவில்லை. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்குவேன் என்ற வாக்குறுதியையும் இன்று வரை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
கறுப்பு பொங்கல்
இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாகவும், வரலாறு காணாத மின்வெட்டால் பல லட்சம் குடும்பங்கள் வேலை இழந்து வாடுவதாலும், தினந்தோறும் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதாலும், ஜாதிக் கலவரங்கள் தலை விரித்து ஆடுவதாலும் இந்த பொங்கல் விழாவை தே.மு.தி.க. கறுப்பு பொங்கலாக கொண்டாடுகிறது. அதே வேளையில் தே.மு.தி.க.வினால் ஆண்டு தோறும் மக்களுக்கு வழங்கும் உதவிகள் எந்த விதத்திலும் தடைபடா வண்ணம் வருகிற 11ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் ஏழை விவசாய குடும்பங்களுக்கு பொங்கல் உதவியாக பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி, ஏலக்காய், திராட்சை, நெய் ஆகியவைகளும், கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகளும் வழங்கப்படும்.அதேபோல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 10 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications