10ம் தேதி கூடுகிறது காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் ஜனவரி 10ம் தேதி டெல்லியி்ல கூடுகிறது.
இரு மாநிலங்களின் நதி நீர்ப் பற்றாக்குறை குறித்து ஆராய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இரு மாநிலங்களின் நீர்ப் பற்றாக்குறை குறித்து விவாதித்து ஆராயப்படவுள்ளது.
அதன் பின்னர் இதுகுறித்த விவரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 11ம் தேதிக்குள் கண்காணிப்புக் குழுவைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications