சாதி வெறியைத் தூண்டும் ராமதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஹைகோர்ட் வக்கீல்கள் டிஜிபியிடம் மனு
சென்னை: தமிழகம் முழுவதும் சாதி வெறியைத் தூண்டிவிடும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, காடு வெட்டி குரு ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் டிஜிபி ராமானுஜத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் காடு வெட்டி குரு ஆகியோர் கடந்த எட்டு மாதங்களாக அரசியல் சுய லாபத்திற்காக, தமிழகம் முழுவதும் ஜாதி வெறியை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்த வன்னியர் சங்க விழாவில் எம்.எல்.ஏ. என்பதை கூட பொருட்படுத்தாமல் காடு வெட்டி குரு, "நம் ஜாதி பெண்ணை வேறு எவன் திருமணம் செய்தாலும் வெட்டுங்கள்' என பகிரங்கமாக ஜாதி வெறியை தூண்டியுள்ளார்.
இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் பேசிய குரு, ஜாதி வெறியை தூண்டி பேசினார். அதன் பின்னரே, அதே பகுதியில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி கிராமங்களில் ஆதி திராவிடர்களின் குடிசைகள் மற்றும் வீடுகள் ஜாதி வெறியர்களால் திட்டமிட்டு கொளுத்தப்பட்டன.
இத்தகைய ஜாதி வெறியாட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, காடு வெட்டி குரு ஆகியோர் நியாயப்படுத்தி பேசி வருகின்றனர். இது தவிர,ஆதி திராவிட மக்களை தவிர்த்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி அதில் ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் ஆதி திராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்டத்தின் படி புகார் கொடுப்பவர்களையும் கொலை செய்ய வேண்டும் என பேசி வருகின்றனர்.
இது போன்று தமிழகம் முழுவதும் ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தி வரும் ராமதாஸ், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நுழைய மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ராமதாஸ், அன்பு மணி, காடு வெட்டி குரு ஆகியோர் நடத்த இருக்கிற போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications