கருணாநிதி மீது நத்தம் விஸ்வநாதன் அவதூறு வழக்கு
சென்னை: உண்மைக்குப் புறம்பாக தவறான செய்திகளை வெளியிட்டதற்காக திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பர் 23-ந்தேதி வெளியான முரசொலி பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செயல்பாடுகள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு வார இதழில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
இந்த செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. தமிழக அரசு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம், தி.மு.க. தலைவர் கருணா நிதி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications