பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தில் தாறுமாறாக ஓடிய ஆம்னி பஸ்.. சுவரில் மோதியது..

நேற்றிரவு 9 மணிக்கு இந்த விபத்து நடந்தது. பெங்களூர்ல் மடிவாளாவில் இருந்து திருவனந்தபுரத்துக்குக் கிளம்பிய அந்த எஸ்ஆர்எம் நிறுவன பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர்.
பஸ்ஸை ஷிஜூ என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். பஸ்ஸை எடுத்ததில் இருந்தே படுவேகத்தில் அவர் செலுத்தியதாக பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
பொம்மனஹள்ளியைக் கடந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தில் ஏறிய அந்த பஸ் படுவேகத்தில் சென்றது. மிகக் குறுகலான அந்தப் பாலத்தில் சென்ற சில பஸ்களை ஓவர்டேக் செய்து கொண்டு சென்றார் ஷிஜூ.
இந் நிலையில் திடீரென பஸ்ஸின் கட்டுப்பாட்டை டிரைவர் இழந்தார். பாலத்தின் மையத் தடுப்பில் மோதிய பஸ் நிலை தடுமாறி இடதுபுறமாகத் திரும்பி பாலத்தின் சுவரின் மீது மோதியது. சுவர் உடையாததால் பஸ் பாலத்தைவிட்டு கீழே பாயவில்லை.
ஆனால், பஸ் மோதியதில் ஒரு மின்கம்பம் உடைந்து கீழே ஓசூர் ரோட்டில் விழுந்தது. இந்த மின் கம்பம் கீழே நின்றிருந்த வரதராஜுலு (20) என்பவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் இறந்தார்.
விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications