ஜார்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றதையடுத்து அரசு மெஜாரிட்டியை இழந்தது. இதனால் முதல்வர் அர்ஜூன் முண்டா பதவி விலகினார். இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அம்மாநில ஆளுநர் சையது அகமதுவின் ஆலோசகர்களாக மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் மதுக்கர் குப்தா, ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். இயக்குனர் கே.விஜய் குமார் ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதுக்கர் குப்தா, மாநில மற்றும் மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். 2009-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் தலைமையிலான படை கடந்த 2004 சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்றது. இதன்பின்னர் மத்திய அரசுப் பணிக்கு சென்ற விஜயகுமார், கடந்த 2012 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது நக்சல் விவகாரங்கள் துறையின் மூத்த ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications