விடை பெற்றார் ஹிலரி க்ளிண்டன்: புதிய அமைச்சரானார் கெர்ரி!

முன்னதாக முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஒபாமாவிடம் கொடுத்தார். ஜான் கெர்ரி புதிய செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.
ஹிலரியின் உருக்கமான பிரியாவிடை
2009 ஆம் ஆண்டு ஹிலரி பதவியேற்றது முதல் நான்கு ஆண்டுகளாக சுமார் 70,000 ஊழியர்கள் கொண்ட வெளியுறவுத்துறையை சிறப்பாக நிர்வகித்து வந்தார். அதிகப்படியான தூரம் பயணம் செய்து உலகின் முக்கிய தலைவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். சமீபத்திய அமெரிக்காவில் ஹிலரி தன்னிகரற்ற வெளியுறவுத்துறை செயலாளர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அமெரிக்க மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு மிகவும் உயர்ந்து உள்ளது. இந்த பதவியிலிருந்து விலகிச்செல்வதை முன்னிட்டு, துறை ஊழியர்கள் மத்தியில் உருக்கமான உரையாற்றினார். வெளியுறவுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், பென்டகனில் செயல்பட்டு வரும் ராணுவத்துறைக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக, நீங்கள் மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தூதரகத்தில் குண்டு வெடித்தது
ஹிலரி பதவியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாளில், துருக்கி நாட்டின் அங்காரா நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதை வருத்தத்துடன் குறிப்பிட்ட ஹிலரி, "நாம் மிகவும் நெருக்கடியான, அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். இன்று தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பு அதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. நமது தூதரக அதிகாரிகளுடனும், துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சருடனும் பேசியுள்ளேன். 21ம் நூற்றாண்டில் பல்வேறு சோதனைகள் நிறைந்து இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிகரமாக செயல்படும் அளவுக்கு நமது வெளியுறவுத்துறை வலிமையுடன் இருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
கன்யாகுமரி தமிழர் மெர்வின் ராஜதுரை
வெளியுறவுத் துறையில். ஹிலரியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கன்னியாகுமரியில் பிறந்த மெர்வின் ராஜதுரை ஆவார். அவர் இந்திய விவகாரங்கள் தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications