யுஎஸ்: 2016 அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஹிலரி?

2008 ஆண்டு உட்கட்சி தேர்தலில் ஒபாமாவுக்கும், ஹிலரிக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஒபாமா அதிபர் ஆகிவிட்டார். ஹிலரியை தனது முக்கியமான அமைச்சர் ஆக்கி நட்புறவையும் வளர்த்துக் கொண்டார்.
ஹிலரியின் பணிகளுக்கு பிரத்தியேகமாக நன்றி செலுத்துவதற்காக, அவருடன் தொலைக்காட்சியில் ஒன்றாக தோன்றி ஒரு மணி நேரம் பேட்டி கொடுத்தார். அதில் அமெரிக்க மக்களின் முன்பாக நன்றி செலுத்த விரும்பியே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன் என்றார்.
தவிர, அமெரிக்க மக்களுக்கு ஹிலரியை அடுத்த அதிபராக அடையாளம் காட்டும் முயற்சியாகவும் இந்த ஒரு மணி நேர சந்திப்பு அமைந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹிலரி 2016 தேர்தலில் போட்டியிடுவதை அவரது கணவர் பில் க்ளிண்டனும் மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறார். அதிபர் ஒபாமாவின் ஆதரவும் ஹிலரிக்கே இருக்கும் என்று நம்பபடுகிறது.
அடுத்த இரு ஆண்டுகள் குடும்பத்துடன் செலவழித்து விட்டு, அதிபர் தேர்தலுக்கு ஹிலரி தயாராவார் என்றே பெரும்பான்மையான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து விலகியுள்ளார் என்றே ஜனநாயகக் கட்சியினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வாய்ப்புள்ளவர் என்று கருதப்படும் இன்னொருவர் மேரிலாண்ட் ஆளுநராக இருக்கும் மார்ட்டின் ஒமாலி.
மீண்டும் அதிபராக ஒபாமா பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், 2016ல் யார் அதிபராவார் என்பதற்கான கேள்விகள் இப்போதே எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications