பி.ஆர்.பழனிச்சாமி மீது நிலமோசடி வழக்கு.. கொடுத்தார் சோனை!
மதுரை: மதுரை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது சோனை என்பவர் ஒரு புதுப் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை பனையூரைச் சேர்ந்தவர் சோனை. இவர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில்,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சாய்னாபுரம் கண்மாய் அருகே எங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2007-ம் ஆண்டு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் புரோக்கர்கள் மேலூர் சுந்தரம், மலையாளம், முத்துக்குமார் ஆகியோர் விற்பனைக்கு கேட்டனர். ஆனால் நாங்கள் அதனை விற்க மறுத்துவிட்டோம்.
பலமுறை அவர்கள் எங்களை சந்தித்து பி.ஆர்.பழனிச்சாமி உங்களை சந்திக்க விரும்புகிறார். உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள இடங்களை அனைத்தையும் அவர் வாங்கிவிட்டார். எனவே உங்களுக்கு தண்ணீர் உள்பட எதுவும் கொண்டுவர பாதை இருக்காது என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி ராசுவிடம் நில வரி கட்ட சென்றபோது, உங்கள் நிலத்தை பி.ஆர்.பழனிச்சாமி வாங்கிவிட்டார். எனவே அவர் சொன்னால்தான் வரி கட்ட முடியும் என்று கூறினார்.
போலி ஆவணங்கள் மூலம் பி.ஆர்.பழனிச்சாமி எங்கள் நிலத்தை கிரையம் செய்துள்ளார். அதனை மீட்டு எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பி.ஆர்.பி. உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications