நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக நிச்சயமாக போட்டி: வைகோ (கூட்டணி யார் கூட சார்!)

ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என்பதைக் கூட ஒரு அறிவிப்பாக வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறது மதிமுக. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக கடைசி நேரத்தில் இடப் பங்கீடு விஷயத்தில் முதுகில் குத்தியதையடுத்து தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் வைகோ.
இந் நிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.
எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசை வற்புறுத்தி ராஜபக்சே வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அந்தக் கட்சி தயாரா?.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம் என்று அறிக்கை வெளியிட்டால் நான் திமுகவை விமர்சிக்க மாட்டேன்.
ராஜபக்சேவின் வருகையை கண்டித்து என் தலைமையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும், திருப்பூர் துரைசாமி தலைமையில், திருப்பதியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக நிச்சயமாக போட்டியிடும் என்றார் வைகோ.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications