ரொம்ப அழகா இருக்காங்க பெண் கலெக்டர்.. லூஸ் டாக் விட்ட உ.பி. அமைச்சர்

பெண் கலெக்டர் ஒருவரை மிகவும் அழகாக இருப்பதாக அவர் பொது இடத்தில் பேசி சிக்கலில் மாட்டியுள்ளார்.
சல்தான்பூர் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாண்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.தனலட்சுமியைப் பற்றி அவர் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அவரது அழகு உள்ளிட்டவை குறித்து அமைச்சர் பேசப் பேச கூட்டத்தினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். கலெக்டர் தனலட்சுமிக்கும் அமைச்சரின் பேச்சு புரியவி்ல்லை. அவரும் குழப்பத்துடன் காணப்பட்டார்.
பாண்டே பேசுகையில், ஏற்கனவே இந்த மாவட்டத்திற்கு காமினி செளஹான் என்ற அழகான கலெக்டர் இருந்தார். இப்போது மீண்டும் ஒரு அழகான பெண் கலெக்டர் கிடைத்துள்ளார். இன்னும் இவர்களைப் போல அழகான கலெக்டர்கள் இந்த மாவட்டத்துக்குக் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். இருப்பினும் இப்போதைய கலெக்டரைப் போன்ற அழகுடையவர்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றார் பாண்டே.
அமைச்சர் பேசப் பேச கலெக்டர் தனலட்சுமி கடும் அதிருப்தியை முகத்தில் காட்டியபடி இறுக்கமாக அமர்ந்திருந்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து ஆளும் கட்சியான சமாஜ்வாடிக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி எம்.எல்.ஏ ரவிதாஸ் மெஹ்ரோத்ரா கூறுகையில், இது மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். அரசுக்கும் கெட்ட பெயரைக் கொடுக்கும் என்றார்.
அரசியல்வாதி என்றால், அதிலும் அமைச்சர் என்றால் வாயில் வருவதையெல்லாம் பேசலாம் போல..
ஏ.வ. வேலு கூட இப்படித்தான் பேசினார்
கடந்த திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஏ.வ.வேலு கூட ஒரு பெண் மாவட்ட ஆட்சித் தலைவரை அழகாக இருப்பதாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
அது சரி ஊர் ஊருக்கு ஒரு 'வாலு' இருக்கத்தானே செய்யும்...!












Click it and Unblock the Notifications