ஓசூரில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றதற்காக இளம்பெண்ணை கடத்திய 5 வாலிபர்கள்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்ற இளம்பெண்ணை கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். அவர் மகள் மஞ்சுளா(21). அவர் ஓசூரில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையம் ஒன்று வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுரேஷ்பாபுக்கு மஞ்சுளாவை பெண் கேட்டு வந்துள்ளனர். மஞ்சுளா தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சுரேஷ்பாபு ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் தனது நண்பர்கள் ஓசூரைச் சேர்ந்த விக்னேஷ்(25), சாமனப்பள்ளி முனிராஜ்(28), மீன்கடையைச் சேர்ந்த பசவராஜ்(32), முத்துராயன் ஜீபி கதிரவன்(28) ஆகிய 4 பேர் உதவியோடு தன்னை நிராகரித்த மஞ்சுளாவை காரில் கடத்தினார்.

இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீசார் உத்தனபள்ளி அருகே மஞ்சுளாவை மீட்டனர். மேலும் அவரைக் கடத்திய சுரேஷ்பாபு உள்ளிட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+