மாணவர்கள் செல்போனில் கேரள ஆசிரியையின் நிர்வாணப் படம்... பரபரப்பு
கோட்டயம்: கேரளாவில் அரசு ஐடிஐ மாணவர்கள் சிலர் மார்பிங் செய்யப்பட்ட தங்களது ஆசிரியையின் நிர்வாணப் படத்தை செல்போனில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டயத்தில் அரசு ஐடிஐ உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் படிக்கின்றனர். அங்கு தற்காலிக ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த ஆசிரியையின் நிர்வாணப் படம் மாணவர்களின் செல்போனில் உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ஐடிஐ முதல்வரிடம் புகார் கூறினார். இதையடுத்து சந்தேகத்துக்குரிய 20 மாணவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். ஆனால் படம் எதுவும் இல்லை. இருப்பினும் சந்தேகம் போகவில்லை.
ஒருவேளை மாணவர்கள் படத்தை அழித்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அனைவரின் மெமரி கார்டுகளையும் தனியாக எடுத்து செல்போன் நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியையின் நிர்வாணப் படம் அதில் இருந்தது தெரிய வந்தது.
ஆனால் இது ஒரிஜினல் படம் இல்லை. மாறாக மார்பிங் செய்யப்பட்ட படமாகும். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதிலிருந்து அவரது படத்தை எடுத்து அதை நிர்வாணமான ஒரு பெண்ணின் உடலோடு இணைத்து மார்பிங் செய்துள்ளனர்.
அந்த ஆசிரியை மிகவும் கண்டிப்பானவராம். மாணவர்களிடம் கண்டிப்புடன் அவர் நடந்து கொண்டதால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் ஆசிரியைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது.
-
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications