For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Google Oneindia Tamil News

Veerappan
டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது.

இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 21 போலீஸாரை குண்டு வைத்துத் தகர்த்துக் கொன்றனர். இந்த வழக்கில் இந்த நான்கு பேருக்கும் மைசூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் போனது. உச்சநீதிமன்றமோ மேல்முறையீடு செய்த 7 பேரில் நால்வரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது.

தற்போது அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நாலவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

English summary
The President has rejected the mercy petition of four associates of forest brigand Veerappan, who were sentenced to be hanged to death. Gnanprakasham, Simon, Meesekar Madaiah and Bilvendran were sentenced to undergo life imprisonment by the Mysore court in connection with the killing of 21 policemen in a blast at Palar in 1993. But the government moved the Supreme Court, which in January awarded them the death sentence. They earned a breather on the ground that their petition seeking clememcy is still pending with the President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X