வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு.. நாளையே நால்வருக்கும் தூக்கு?
டெல்லி/பெல்காம்: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து நாளையே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களையும் ரகசியமாக தூக்கில் போட்டு செய்தியை மட்டும் வெளியில் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சந்தீப் நாராயணன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நேற்று நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் நாராயணன், இவர்களின் தூக்கு தண்டனையை திங்கட்கிழமை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால், இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கும்படி கோரினார். ஆனால் 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. தூக்கிலிடும் தேதி முடிவு செய்யப்படாத நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது.
நாளையே தூக்கு
இதையடுத்து நால்வரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று பெங்களூரில் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தலைமைச் செயலாளர், டிஜிபி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி ககந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தூக்கிலிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் தூக்கிலிடும் தேதியை மைசூர் கோர்ட் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளையே நால்வரும் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications