4 வீரப்பன் கூட்டாளிகளை பிப். 20 வரை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!

1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர் .இதில் 21 போலீசார் உயிரிழந்திருந்தனர். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும் கடைசியாக 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்திருந்தனர்.
அண்மையில் இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தங்களது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 20) வரை வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் தூக்கை எதிர்நோக்கியிருக்கும் 4 வீரப்பன் கூட்டாளிகளுக்கும் சற்றே ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.
தூக்கு தேதி கோரி மனு
இதனிடையே இன்று மைசூர் தடா நீதிமன்றத்தில் பெல்காம் சிறை அதிகாரி, 4 வீரப்பன் கூட்டாளிகளையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக் கோரி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில்தான் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவும் வெளியானது.
இதனால் இனி உச்சநீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில்தான் வீரப்பன் கூட்டாளிகளுக்கான தூக்கு தண்டனை அமையும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications