'மனித உரிமை மீறல்' நாடான இலங்கைக்கு இங்கிலாந்தின் ஆயுத விற்பனை நீடிக்கிறது: 'இன்டிபென்டென்ட்‘ நாளேடு
லண்டன்: மோசமான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் மதிப்பிலான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடந்த ஆண்டு இங்கிலாந்து விற்பனை செய்திருப்பதாக அந்நாட்டின் " 'இன்டிபென்டென்ட்‘ நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
இன்றைய 'இன்டிபென்டென்ட்‘ நாளேட்டின் தலைப்புச் செய்தியான இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இலங்கைக்கு 3 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களில் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்டவை அடக்கம்.
மனித உரிமை மீறல்களால் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சகத்தால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருக்கும் கவலைக்குரிய நாடாக இலங்கையை பட்டியலிட்டு வைத்திருந்தது. இப்படிப் பட்டியலிடப்பட்ட பிறகும் கடந்த ஜுலை ஆண்டு முதல் செப்டம்பர் வரையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வந்திருக்கிறது.
600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் செட் கண்கள் ஆகியவற்றை விற்க இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இலங்கைக்கு 330,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், இலங்கைக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications