ஷாங்காயில் கேன்சர் பயத்தால் வாபஸ் பெறப்பட்ட பள்ளிச்சீருடைகள்
பெய்ஜிங்: புற்றுநோய் பயத்தால் சீனாவில் உள்ள 21 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியரை சீருடை அணிய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காயில் உள்ளது ஊக்சியா கிளோதிங் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகளில் தடை செய்யப்பட்ட சாயம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அந்த சாயத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகளில் 6 பேட்ச் உடைகள் தரமற்றவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்திடம் இருந்து ஷாங்காயில் உள்ள 21 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சீருடைகள் வாங்கியுள்ளன. இதையடுத்து அந்த சீருடைகளை அணிய வேண்டாம் என்று மாணவர்களை வலியுறுத்துமாறு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அந்த சீருடைகள் திரும்பப் பெறப்பட்டு அதன் தரத்தை அதிகாரிகள் சோதிக்கவிருக்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications