For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அம்மா மெஸ்': ரூபாய்க்கு ஒரு இட்லி.. மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்து ஜெ!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியின் மலிவு விலை உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இங்கு மிகவும் மலிவான விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை விற்கப்படும்.

சென்னை முழுவதும் 1000 உணவகங்களை திறக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 15 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏழைத் தொழிலாளர்கள் நலனுக்காக இந்த உணவகங்களை மாநகராட்சி அமைத்துள்ளது.

இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவகங்கள் திறக்கபட்டன.

மண்டலத்துக்கு ஒன்று

மண்டலத்துக்கு ஒன்று

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. எனவே மண்டலத்துக்கு ஒன்று என்று மொத்தம் 15 உணவகங்கள் இன்று திறக்கப்படுகின்றன.

சாந்தோமில் முதல் உணவகம்

சாந்தோமில் முதல் உணவகம்

சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகே மாநகராட்சி கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை ஜெயலலிதா இன்று பிற்பகல் 12 மணியளவில் தொடங்கி வைத்தார்.

ஒரு இட்லி ஒரு ரூபாய்

ஒரு இட்லி ஒரு ரூபாய்

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், 350 கிராம் எடை கொண்ட சாம்பார் சாதம் ரூ. 5க்கும், 350 கிராம் எடை கொண்ட தயிர் சாதம் ரூ. 3க்கும் விற்கப்படும்.

காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இட்லி

காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இட்லி

மலிவு விலை உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி கிடைக்கும். அதன் பிறகு இட்லி விற்பனை இருக்காது.

மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தயிர் -சாம்பார் சாதம்

மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தயிர் -சாம்பார் சாதம்

அதேபோல பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தயிர் சாதமும், சாம்பார் சாதமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்களும்

7 நாட்களும்

வாரத்தில்7 நாட்களும் இந்த உணவகங்கள் திறந்திருக்கும். அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் 10 முதல் 12 பேர் இந்த உணவகங்களில் பணியாற்றுவார்கள்.

திருவொற்றியூர் - பிராட்வே

திருவொற்றியூர் - பிராட்வே

மலிவு விலை உணவகங்கள் அமைந்துள்ள இடங்கள் - மாகராட்சி வணிக வளாகம், திருவொற்றியூர்; மாநகராட்சி கட்டிடம், மாத்தூர்; சமூக நல கூடம், சூரப்பட்டு; மாநகராட்சி கட்டிடம், பழைய வண்ணாரப்பேட்டை; மாநகராட்சி கட்டிடம், பிராட்வே.

புளியந்தோப்பு - சாந்தோம்

புளியந்தோப்பு - சாந்தோம்

பழைய மண்டல அலுவலகம், புளியந்தோப்பு; மாநகராட்சி கட்டிடம், ஓரகடம்; பழைய மண்டல அலுவலகம், கீழ்ப்பாக்கம்; மாநகராட்சி கட்டிடம், சாந்தோம்; மாநகராட்சி கட்டிடம், தியாகராயநகர்.

மதுரவாயல் - துரைப்பாக்கம்

மதுரவாயல் - துரைப்பாக்கம்

மாநகராட்சி கட்டிடம், மதுரவாயல்; மாநகராட்சி கட்டிடம், நங்கநல்லூர்; மாநகராட்சி கட்டிடம், திருவான்மியூர்; வணிக வளாகம், பெருங்குடி; தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், துரைப்பாக்கம்.

English summary
Chief Minister Jayalalitha is all set to launch low price restaurants in Chennai today. The restaurants are the brainchild of Chennai corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X