பரபரப்பான சூழலில் கூடியது நாடாளுமன்றம்

இன்றைய குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை அதிக அளவில் பதம் பார்க்காத வகையில் அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரிலும் பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக காத்திருக்கிறது. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் காவி தீவிரவாதப் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஷிண்டேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வைத்து அது அவையில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோலா கசாப், அப்சல் குரு ஆகியோர் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டது குறித்தும் பிரச்சினை கிளம்பும் என்று தெரிகிறது. மேலும், ஹெலிகாப்டர் பேர ஊழல், விலைவாசி உயர்வு, சூர்யநெல்லி கற்பழிப்பு வழக்கில் பி.ஜே.குரியன் பதவி விலகுவது, தெலுங்கானா உள்ளிட்ட பல பிரச்சினைகளும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரச்சினையயையும் அதிமுக, திமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கிளப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான நாட்கள் முடங்கும் என்று இப்போதே முன்கூட்டியே எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications