தர்மபுரி.. ஊரை எரித்துவிட்டு ”நீதி கோரி” ஆர்ப்பாட்டம்- டாக்டர் ராமதாஸும் பங்கேற்பு!
சென்னை: தர்மபுரியில் தலித் மக்களின் வீடுகளை சூறையாடியவர்களுக்கு நீதி கோரி அவர்களுடன் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தர்மபுரியில் தலித் மக்களின் வீடுகள் ‘வேட்டையா'டப்பட்டதைத் தொடர்ந்து ஊர் ஊராகப் போய் சாதி சங்கங்களின் தலைவர்களை டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசி வருகிறார். இந்நிலையில் தலித் மக்களின் வீடுகளை ‘வேட்டையா'டிய சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி சிறையில் அடைக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நீதி கோரி போராட்டம் நடத்தினர். தர்மபுரி கலவர வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அவர்கள் கோரினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் முழக்கங்களை எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகர் போக் சாலையில் ராமதாஸ் தலைமையில் கூட்டத்தில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதால் ராமதாஸ் கலந்து கொண்ட இன்றைய போராட்டத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications