டெல்லி 'கேங் ரேப்' - மைனர் சிறுவன் மீது கொலை, கற்பழிப்பு வழக்குப் பதிவு!

23 வயதான பிசியோதெரப்பி மாணவி தனது நண்பருடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது இந்த 17 வயது மைனர் சிறுவன் உள்பட 6 பேர் சேர்ந்து கொடூரமாக அப்பெண்ணை பலாத்காரம் செய்தனர். அதில் அந்த சிறுவனுடைய செயல்தான் மிருகத்தனமாக இருந்துள்ளது. 2 முறை அப்பெண்ணை இவன் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் அப்பெண்ணின் பிறப்புறுப்பில் பெரிய இரும்புக் கம்பியால் கொடூரமாகவும் தாக்கியுள்ளான்.
இதனால் அப்பெண் கடும் காயமடைந்தார். கடைசியில் அவர் உயிரிழக்கும் நிலைக்குப் போகும் அவலம் நேரிட்டது.
இந்த கொடூரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மைனர் சிறுவனை அவனது வயதைக் காரணம் காட்டி தனியாக வழக்கிலிருந்து பிரித்து சிறார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தது போலீஸ். அவனுக்கு மிகவும் குறைந்த அளவிலான தண்டனையே கிடைக்கும் நிலை இதனால் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த மைனர் சிறுவன் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்கைப் பதிவு செய்ய சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மார்ச் 6ம் தேதி தொடங்கவுள்ளது.
மைனர் சிறுவனின் செயல், மற்ற குற்றவாளிகள் இழைத்த குற்றத்திற்கு சற்றும் இளைத்ததில்லை என்று போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சிறுவன் மீதும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்குகளில் இவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட அவனுக்கு 3 ஆண்டு சிறார் சீர்திருத்தப் பள்ளிவாசம்தான் தண்டனையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications