பிராவுக்கு வயசு நூறு: 80% பெண்கள் அணிவது தவறான சைஸ் பிராவே!
லண்டன்: பிரா கண்டுபிடிக்கப்பட்டு 100 வருடங்களாகி விட்டது. ஆனால் பிரா அணிந்திருக்கும் பெண்களில் 80 சதவீதம் பேர் தவறான சைஸ் பிராவையே அணிகிறார்களாம்.
பெண்களைப் பொறுத்தவரை பிரா வாங்கும்போதும், அதை அணியும்போதும் சில வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறுகின்றனர்.சரியான பிராவைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் எப்போதுமே சரியாக செயல்படுவதில்லை என்று கூறுகிறார்கள் பிரா தயாரிப்பாளர்கள்.
பிரா கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நடந்த கருத்துக் கணிப்பில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் உள்ளாடை சமாச்சாரம் என்றாலும் அது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பல்வேறு பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன படியுங்களேன்.

எது வாங்கினாலும் பிரச்சினைதான்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஐந்தில் நான்கு பெண்கள் கூறும்போது, எந்த மாதிரியான பிரா வாங்கிப் போட்டாலும் எனக்கு ஏதாவது ஒரு வகை பிரச்சினை வரத்தான் செய்கிறது என்று கூறியுள்ளனர்.

சரியும் மார்பு
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 41 சதவீதம் பேர் கூறியு புகார் என்னவென்றால் சைட் பூப்.. அதாவது பிரா அணிந்தும் கூட பக்கவாட்டில் மார்புகள் சரிந்திருப்பது. சரியான முறையில் 'கப்'பில் மார்புகள் பொருந்தாமல், பக்கவாட்டிலும் மார்புகள் சரிவதாக இவர்கள் குறை கூறுகிறார்கள்.

சின்ன கப்பால் பெரிய பிரச்சினை
சிலருக்கு கப்புக்குள் மார்புகள் முழுமையாக பொருந்தாமல் போய் விடும். அப்படிப்பட்டவர்களுக்கு மார்புகள் வெளியிலும் தெரியும் வகையில் காணப்படும். எனவே இரண்டு மார்புகளுக்குப் பதில் நான்கு மார்புகள் இருப்பது போன்ற பிரமையை அந்த தோற்றம் ஏற்படுத்துவதாக இப்படிப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

சைஸுக்கேற்ற பிரா போடுவதில்லை
பெரும்பாலான பெண்கள் தங்களது சைஸுக்கேற்ற பிராவைப் போடுவதில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். சரியான பிராவைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும் இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பிராதான் சரியில்லை
பெரிய மார்புகளைக் கொண்ட சில பெண்கள் கூறுகையில், எனது மார்புகள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் பிராதான் சரியில்லை என்று குற்றத்தைத் தூக்கி பிரா மீது போட்டனராம்.

சரியான சைஸ்
சரியான சைஸ் பிராவை எப்படித் தேர்வு செய்வது என்று பிரா தயாரிப்பாளர்கள் கூறுகையில், கப்புக்குள் மார்பு முழுமையாக அடங்க வேண்டும். அது முதல் முக்கிய அம்சம். மார்பு முழுமையாக கப்புக்குள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் அவர்கள்.

வெட்கப்படாமல் கேளுங்கள்
பிரா வாங்கப் போகும்போது உங்களது சரியான சைஸை சரியாக தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். மேலும் உங்களுக்கேற்ற பிராதானா நீங்கள் வாங்குவது என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு இடத்தில் கிடைக்காவிட்டால் நாலு இடத்திற்குப் போய்ப் பார்ப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் இவர்கள் அட்வைஸ் தருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications