தென் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை… குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் மழை வரை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர்ந்த மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கனமழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 12ஆம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளுக்கான பொதுத்தேர்வு, திட்டமிட்டபடி நடைபெற்றது.
திருப்பூரில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் திடீரென கனமழை பெய்தது. திண்டுக்கல்லிலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், நேற்றிரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இன்று காலை ஏமாற்றத்துடன் கரை திரும்பினார்.
கோடை காலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்ணீர் பற்றாக்குறை நீங்கியுள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications