106 வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற அமெரிக்கர்
பெவர்லி: இளம் வயதில் தாய் மற்றும் 5 உடன்பிறப்புகளை காப்பாற்ற 9ம் வகுப்புக்கு முன்பே படிப்பை நிறுத்திய ஒருவர் தனது 106 வயதில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
மசாசுசெட்ஸைச் சேர்ந்தவர் ஃபிரெட் பட்லர்(106). தனது தாய் மற்றும் 5 உடன் பிறப்புகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருந்த அவர் 9ம் வகுப்புக்கு முன்பே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அவருக்கு திருமணமாகி 65 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 5 குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர் இரண்டாம் உலகப் போரில் ராணுவத்தில் பணிபுரிந்தார். மேலும் பல ஆண்டுகளாக குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்தார்.
ஆனாலும் தான் பள்ளிப்படிப்பை முடிக்காதது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது. அதனால் படிப்பின் முக்கியத்துவம் குறித்து அவர் தனது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பள்ளிப்படிப்பை முடித்ததற்கான கௌரவச் சான்றிதழை பெவர்லி உயர் நிலைப் பள்ளி நேற்று முன்தினம் வழங்கியது. அவர் இந்த சான்றிதழுக்கு தகுதியானவர் என்று மேயர் பில் ஸ்கான்லன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications