ஐன்ஸ்டீன், பில் கேட்ஸை விட அதிக ஐ.க்யூ. உள்ள 12 வயது இந்திய சிறுமி நேஹா ராமு
லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய சிறுமியான நேஹா ராமு(12) விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ் ஆகியோரை விட அதிக நுண்ணறிவு(ஐ.க்யூ) உள்ளவராக இருக்கிறார்.
இங்கிலாந்தில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகள் நேஹா ராமு(12). அவர் மென்சா நுண்ணறிவு(ஐ.க்யூ) தேர்வு எழுதினார். அதில் அவர் 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரின் ஐ.க்யூ. 160 தான்.
அப்படி என்றால் நேஹா ஐன்ஸ்டீன், ஹாக்கிங் மற்றும் பில் கேட்ஸை விட அதிக ஐ.க்யூ. உள்ளவர். நேஹா 7 வயதாக இருக்கும்போது தான் அவரது பெற்றோர்கள் இங்கிலாந்தில் குடியேறியுள்ளனர். பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் அவர் மென்சா ஐ.க்யூ. தேர்வில் 18 வயதுக்குட்பட்டோர் அதிகபட்சம் எடுக்க முடிந்த மதிப்பெண்ணை வாங்கியுள்ளார்.
என் மகளை நினைக்கையில் பெருமையாக உள்ளது என்று அவரது தாய் ஜெயஸ்ரீ தெரிவித்தார். நேஹா பெற்றோர் வழியில் டாக்டராக முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க திட்டமிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications