டெல்லி டெசோ கருத்தரங்கம்- பங்கேற்றது காங்கிரஸ் கட்சி!

திமுக தலைமையிலான டெசோ அமைப்புபின் சார்பில் டெல்லியில் 'இலங்கை தமிழர்களின் இன்னல்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்வார்களா? இல்லையா என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இன்று காலையில்தான் லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக திமுக வெளிநட்பபு செய்திருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் எம்.பிக்கள் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரியா சுலே, திரிபாதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்தரங்கின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி வரவேற்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் உரையாற்றினார். பின்னர் மு.க. ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். ஸ்டாலின் தமது உரையில் ஈழத் தமிழரின் துயரை வெளிப்படுத்தி விரிவாக பேசினார்.
முதல் நிகழ்ச்சியாக இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றம் தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது.
ஏற்கெனவே இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், டெசோ அமைப்பு சார்பில் தமிழகத்தில் வரும் 12-ந் தேதி முழுஅடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டிருக்கும் டெசோ கருத்தரங்கில் நிறைவேற்றப்படும் தீர்மானம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications