ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு முந்தைய 10 கிலோ வெடிபொருள் அழிப்பு
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதிக்கான சாலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டிருந்த 10 கிலோ வெடிப்பொருட்களை ஆந்திர போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீசாரிடம் அண்மையில் சிக்கிய மாவோயிஸ்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சித்தூர் மாவட்டம் பீலேர் அடுத்த அப்பிரெட்டிகாரிபள்ளி அருகே வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக ஏர்ராவாடி பாளையம், தலபலா, அப்பிரெட்டிகாரிபள்ளி, ஏலமந்தா கிராமங்களில் நவீன கருவிகளுடன் ரகசிய சோதனையில் ஆந்திர போலீசார் ஈடுபட்டனர். நேற்று காலை அப்பிரெட்டிகாரிபள்ளி கிராமம் அருகே வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
அங்கு இரண்டு பெட்டிகளில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை போலீசார் அழித்தனர். இதுகுறித்து பிலேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கூறுகையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் அவர் திருமலை செல்லும் வழியில் அலிபிரியில் சாலையோரம் புதைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அதில் அவர் உயிர் தப்பினார். இதைதொடர்ந்து அவரை கொலை செய்ய இப்பகுதியில் வெடி பொருட்கள் சாலையில் புதைக்கப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications