2014- தேர்தலிலும் ஐமு கூட்டணியே வெல்லும்: பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை

லோக்சபாவில் நேற்று முன் தினம் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பேசுகையில், 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரதி ஜனதா கட்சி இரும்பு மனிதர் என்ற ஒருவரை களமிறக்கினர். மன்மோகன்சிங் ஒரு பலவீனமான பிரதமர் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் என்ன நடந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும். பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அதுதான் அடுத்த தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது.
கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9% ஆக இருக்கிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது 6%க்கு மேல் செல்ல முடியவில்லை. நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சி 3.5% ஆக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2.9%தான் இருந்தது. தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 2% குறைந்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 0.8% தான் குறைந்திருந்தது.
நாடு இப்பொழுது பொருளாதார சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த காலங்களிலும் இதே போன்ற நிலைமையை இந்தியா சந்தித்திருக்கிறது. இதனால் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.
அப்போது எழுந்து பேசிய பாஜகவின் தலைவரும் எம்.பியுமான ராஜ்நாத் சிங், பிரதமர் இதுபோல் ஆத்திரமடைந்து பேசியதில்லை. உங்கள் முகத்தில் தெரியும் சுடரானது அது மரித்துப் போவதற்கு முன்பு எப்படி பிரகாசிக்குமோ அது போல் இருக்கிறது என்று பதில் கொடுத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications