பேச, சிரிக்க நடக்க தெரியாது: அரிதான நோயில் அவதிப்படும் குழந்தை…
பிறந்த குழந்தை அழும்... பின்னர் சில மாதங்களில் முகம் பார்த்து சிரிக்கும்.... மெதுவாக நடக்கும்... மொழி அறிந்து பேசும். ஆனால் 11 மாத குழந்தை ஒன்று அரிதான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றக் குறைபாடு நோய் MeCP2( methyl CpG binding protein 2 )எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான் பிளேக் மெக்மில்லன் என்ற குழந்தை.
நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து நரம்புகள் மூலம் கடத்தப்படுகிறது. இந்த மரபணு குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான சத்துக்கள் கடத்தப்படுவதில்தான் சிக்கலே.
இது ரெட் சின்ட்ரோம் எனப்படும் நோயுடன் மிகமிக நெருங்கிய தொடர்புடையது. 2005 ஆண்டுதான் இப்படி ஒரு நோய் இருப்பதையே கண்டு பிடித்தனர். ஆண் குழந்தைகளை மட்டுமே இந்த நோய் பெரிதும் தாக்குகிறது. மூளையின் செயல்பாடு சரியாக இருக்காது. 5 வயதாகும் வரை ஓரளவு செயல்படும் மூளை பின்னர் மக்கர் செய்ய ஆரம்பித்து விடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கவேண்டும். எவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டாலும் அவர்களின் ஆயுட்காலம் 25 வயதுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

மூளைக்கு கட்டளையிடத் தெரியாது
இந்த நோய் பாதிப்பு உலக அளவில் 150 பேருக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்கள் அடிப்படையாக செய்யும் செயல்கள் கூட மறந்து போய்விடும். மூளைக்கு கட்டளையிடத் தெரியாது. எப்படி பேசுவது? எப்படி சிரிப்பது? எப்படி நடப்பது? எப்படி சாப்பிடுவது என்று என்று கூட மூளைக்கு சொல்லத் தெரியாது.

11 மாத குழந்தை பாதிப்பு
இந்த குறைபாடுதான் பிளாக்கிற்கு உள்ளது. குழந்தை பிளாக் பிறந்தது 2012 மார்ச் 21ம் தேதி. குழந்தை பிறந்து மூன்று வாரம் கழித்துதான் இந்த குறைபாடு இருக்கிறது என்பதையே தாயார் ஜென்னி மெக் மிலன் கண்டறிந்தார். அவர் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் ஆக பணிபுரிகிறார்.

24 மணிநேரமும் கவனிப்புதான்
தனது குழந்தையின் செயல்பாடு நார்மலாக இல்லையே என்பதை கண்டறிந்து கணவரிடம் பாலிடம் கூறவே சோதனை செய்து குழந்தையின் குறைபாட்டினை உறுதி செய்துள்ளனர்.
அது முதல் அந்த குழந்தையை கவனிப்பது மட்டுமே ஜென்னியின் வேலையாகிப் போனது. குழந்தைக்கு அலாரம் செட் செய்திருக்கின்றனர். ஏதாவது ஆபத்தோ, இல்லை இயற்கை உபாதைகள் என்றாலோ அலாரம் ஒலிக்கும் அதைப் பார்த்து சரி செய்துவிடுவோம் என்கிறார் ஜென்னி.

அதிகமா அடம்பிடிக்கிறானே
கொழு கொழுவென்று புன்னகை தவழும் முகத்துடன் காணப்பட்ட பிளேக்கின் முகம் நாளடைவில் படிப்படியாக மாறிப்போனது. இப்போதெல்லாம் அதிகம் அடம் பிடிப்பதும், ஆர்பட்டம் செய்வதுமாக இருக்கிறானாம். சிலசமயம் அவனது வன்முறையைப் பார்த்து ஹார்ட் அட்டாக் கூட வந்துவிடும் என்கின்றனர் ஜென்னி தம்பதியர்.

பணத்தை சேகரிக்கும் பெற்றோர்
அவனுக்கு நாப்கின் மாற்றுவது வேலை செய்வது என நேரம் சரியாக இருக்கிறது. அவனது நோயை குணப்படுத்த சிலர் அறக்கட்டளையும் துவக்கி தேவையான பணத்தை சேகரித்து வருவதாகவும் கூறுகிறார் ஜென்னி.

நம்பிக்கைதான் வாழ்க்கை
ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த நரம்பியல் பேராசிரியர் கெவின் போஸ்ட் இந்த நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். பிளேக்கை மாடலாக வைத்து ரெட் சிண்ட்ரோம்கான சிகிச்சைகளை அளித்து வருகிறார். இந்த நோய் விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர் பிளேக்கின் பெற்றோர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications