ஜெர்மனி பெண்ணை கற்பழித்துவிட்டு 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாஜி டிஜிபி மகன் கேரளாவில் கைது

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார்.
பரோலில் வந்த அவர் தப்பித்துவிட்டார். மகனை தப்பிக்க வைக்க உதவியதாக பிபி மொஹந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில் டெல்லி கற்பழிப்பு வழக்கை அடுத்து பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்களிலும், இணையதளங்களிலும் வெளியாகின.
இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் நபர் ஒருவேளை பிட்டியாக இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு கடிதம் எழுதினர். கடிதம் கிடைத்தவுடன் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பிட்டியை கைது செய்தனர்.
இது குறித்து கேரள போலீசார் ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் கேரளா வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது. பிட்டிக்கு கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications