நிர்வாகிகள் நியமனம்: அப்செட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 68வது பிறந்தநாள் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்
நடந்தது.
அப்போது பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், தமிழ்நாடு காங்கிரசில் பல ஆண்டுகளாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படாமல் உள்ளனர். கட்சி வளர்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு மாதத்திற்குள் மாவட்ட மற்றும் மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார்.
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், தங்கபாலு, ஈ.விகே.எஸ். இளங்கோவன் போன்றோரின் ஆதரவாளர்களை கணக்கில் கொண்டு மாவட்ட, மாநில அணி நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் கொடுத்தாராம்.
அதை வாங்கிக் கொண்ட தலைமை, இந்த நேரத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டால் அது தேர்தல் நேரத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தும் என கருதியே நிர்வாகிகள் பட்டியல் வெளியிடவில்லையாம்.
ஆனால் நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டால் தான் தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகளை வைத்து வேலை வாங்க முடியும் என ஞானசேதிகன் நம்புகின்றாராம். இதை தலைமை கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தத்தை வெளியே சொல்ல முடியாமலும், மனத்திற்குள் வைத்துக் கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றாராம் ஞானசேதிகன்.












Click it and Unblock the Notifications