கள்ளக் காதலியை வெட்டி கூறாக்கி நாய்க்கு போட்ட கால்பந்து வீரருக்கு 22 ஆண்டு சிறை!
ரியோடிஜெனிரோ: கள்ளக் காதலியை வெட்டி கூறாக்கி தமது நாய்க்கு தீனியாகப் போட்ட பிரேசில் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசாவுக்கு 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. இவரது கள்ளக் காதலி எலீசா சமுடியோ. இருவருக்கும் இடையேயான உறவில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை விஷயத்தில் ப்ரூனோ தொடக்கம் முதலே விரும்பவில்லை. ப்ரூனோவின் எதிர்ப்பையும் மீறி எலீசா குழந்தை பெற்றெடுத்தது ப்ரூனோவுக்கு எரிச்சலாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமது நண்பரும் போலீஸ் அதிகாரியுடமான சாண்டோஸ் என்பவரை அணுகி எலீசாவை கொலை செய்யக் கூறியிருக்கிறார். இதையடுத்து ரியோடிஜெனிரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்திய லூயிஸ், பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்.
அதன் பின்னர் ப்ரூனோ முன்னிலையில் எலீசா கொல்லப்பட்டிருக்கிறார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். எலீசாவின் சில பாகங்களை தமது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டுவிட்டு உடல் பாகங்களை வீட்டிலேயே கான்கிரீட் வைத்து பூசி புதைத்துவிட்டார் ப்ரூனோ. இந்தக் கொடூர கொலை தொடர்பாக ப்ரூனோ, அவரது மனைவி உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
தொடக்கத்தில் தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தே வந்தார் ப்ரூனோ. இந்நிலையில் நேற்று முன் தினம் நீதிமன்ற விசாரணையின் போது அவர், எலீசாவை கொலை செய்து உடல் துண்டுகளை நாய்க்குப் போட்டதை ஒப்புக் கொண்டார். ப்ரூனோ குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 22 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ப்ரூனோவின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications