டெல்லியில் தொடரும் சம்பவங்கள்: பீர்பாட்டிலால் பெண்ணின் முகத்தில் குத்திய குடிகார கும்பல்
டெல்லி: டெல்லியில் பீர் பாட்டிலால் பெண்ணைத் தாக்கிய 5 பேர் கொண்ட குடிகார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் பிரபல கான் மார்க்கெட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் ஒரே குடும்ப்த்தைச் சேர்ந்த 8 பேர் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பால்னோர் பெண்கள். ஹோட்டலில் அவர்கள் அமர்ந்த இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் 5 இளைஞர்கள் பீர் குடித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் எதிரே அமர்ந்தவுடன் அருவருக்கத்தக்க கிண்டல்களை அள்ளி வீசி தொந்தரவு செய்திருக்கின்றனர்.
இதில் பொறுமை இழந்த பெண் ஒருவர் குடிகார கும்பலில் ஒருவனை கன்னத்தில் காட்டமாக அறைந்திருக்கிறார். மப்பில் இருந்த அந்த கும்பல் பதிலுக்கு பீர் பாட்டிலால் அப்பெண்ணின் முகத்தில் தாக்கியிருக்கின்றனர். இதில் அப்பெண் படுகாயமடைந்திருக்கிறார். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் குடிகார கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த காட்சிகள் அனைத்துமே ஹோட்டலில் இருந்த சிசிடிவி காமிராவில் முழுவதுமாக தெளிவாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இரவு முழுவதும் டெல்லி போலீசார் அந்த குடிகார கும்பலை தேடி கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த குடிகார கும்பலில் மணீஷ் என்பவன் வசந்த் நகரில் உள்ள சிபிஐ காலனியில் வசித்து வந்திருக்கிறான். விகாஸ் என்ற விக்கி, மாடலாக இருக்கிறான். இவன் அண்மையில்தான் மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறான். இவர்களுடன் ரோகித் ஷெகல், கமல்தீப், பரம்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் டெல்லி பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி பயில்கின்றனர்.
இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications