டெசோ பந்த்: ஆம்பூரில் 100, மயிலாடுதுறையில் 25 திமுகவினர் கைது
வேலூர்: டெசோ வேலைநிறுத்தத்தையொட்டி ஆம்பூரில் கடைகளை மூடக்கோரி பேரணியாகச் சென்ற திமுகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாநில அரசு முனைப்பாக உள்ளது. இன்று பேருந்துகள், ரயில்கள் வழக்கும் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது. டெசோ வேலைநிறுத்தத்திற்கு வணிகர்கள் ஆதரவும் அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறையில் சாலை மறியல் செய்ய முயன்ற திமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் பந்துக்கு ஆதரவு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று விழுப்புரத்தில் 4,000 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடைகளை மூடக்கோரி திமுகவினர் பேரணியாகச் சென்றனர். பேரணியாக சென்ற திமுகவினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications