ஈழவிடுதலைக்காக களத்திற்கு வந்து போராடும் மதுரை, திருச்சி கல்லூரி மாணவிகள்
மதுரை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை, திருச்சியில் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

லயோலா மாணவர்கள் தொடங்கியது
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம்தான் இந்த போராட்டங்களுக்கு விதையாகும். சென்னையில் தொடங்கிய பொறி இன்று தமிழகம் முழுவதும் பெரும் தீயாக மாறியுள்ளது.

மதுரையில் மாணவிகள் போராட்டம்
மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மாணவியர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில்
திருச்சியில் உருமு தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தடையை மீறி கல்லூரி வளாகத்திலேயே உண்ணாநிலை போராட்டம் தொடங்கினர்.

பன்னாட்டு விசாரணை தேவை
இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டுக்கு விசாரனை வேண்டும், ஈழத்திலே பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஐ.நா வில் இந்தியா ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும், தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர வேண்டும், தமிழகத்திலே நடைபெறும் மாணவர் போராட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

காரைக்குடியில்
இதேபோல காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்திலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள்
இதேபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக வாசலில் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளனர். உண்ணாவிரதப் பந்லில் மாணவர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 50 பேர் உள்ளனர்.

நெல்லையில் மாணவர் முகமது கான் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழக மாணவர் முகமது கான் என்ற ஒருவர் மட்டும் அனைத்து அடக்குமுறைகளையும் மீறி 4 வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். ஆனால் இவர் தகுந்த உதவிகளின்றி, ஆதரவின்ரித் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மாணவர்கள்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் சார்பில், இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மோசடியானது போலியானது. எனவே அதை இந்தியா ஆதரிக்க கூடாது. அதற்கு பதிலாக ஐ.நா.சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தின் உள்ளே உள்ளிருப்பு ஆர்பாட்டமாக நடத்தினர்.

நெல்லை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
நெல்லை, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

22 பேர் இன்று முதல் உண்ணாவிரதம்
இக்கல்லூரியைச் சேர்ந்த 22 மாணவர்கள் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லூரி முன்பு நடத்த கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளார் நிஜாம் வீட்டின் அருகே மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications