வாசனை திரவியமாகும் மாட்டு சாணம்
ஜகார்தா: கிருமி நாசினியாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்ட மாட்டுச்சாணம், இப்போது வாசனை திரவியமாகவும் புது அவதாரம் எடுத்துள்ளது.
இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டிஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட் மற்றும் ரியூதியா என்ற இரு மாணவிகள், புதிய வாசனை திரவியத்தை (Air freshner) அறிமுகம் செய்தனர். இந்த வாசனை திரவியத்தின் மணத்தில் மயங்கிப்போன நடுவர்கள், இதன் மூலப்பொருளை அறிந்து, ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் இந்த வாசனை திரவியம் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாம்.
ஜாவா தீவில் உள்ள பண்ணையில் இருந்து மாட்டுச் சாணத்தை வரவழைத்து, அதை மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, அதில் இருந்து நீரை மட்டும் முதலில் பிரித்தெடுத்து, பின்னர், அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்ந்து கொதிக்க வைத்து டிஸ்டில் முறையில் நீராக்கி சில மருத்துவ மூலிகைகளை சேர்த்து இந்த நறுமண திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாததால் உடல் நலத்திற்கு கேடு இல்லை என்று மாணவிகளும் அதை பரிசோதித்து பார்த்த விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த இரு மாணவிகளும், விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்கு உள்ள அறிவியல் கண்காட்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications