அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமா இந்தியா? - இன்று தெரியும்!

இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. கடந்த முறை இது போல் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில் சில திருத்தங்களுடன் இந்தியா கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியது. ஆனால் திருத்தங்கள் செய்ததால் அந்த தீர்மானத்துக்கு வலு இல்லாமல் நீர்த்து போனது. இன்றுவரை அந்த தீர்மானத்தை இலங்கை மதிக்கவும் இல்லை.
இப்போதும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு தீர்மானத்தைத்தான் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
இதில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக அந்நாட்டு குழுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை செய்த குற்றத்தை அந்த நாடே விசாரித்து நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று வாசகத்தை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் இந்த திருத்தத்தை இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈழத்தில் நடந்த படுகொலைகளை, அங்கே தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்படுவதை இந்தியா மவுனமாக வேடிக்கைப் பார்த்து வருகிறது.
சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த ஒரு பேட்டியில், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுக்கிறதா? என்று கூறினார். அவரது பேட்டியைக் கூட மத்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலையை அறிவிக்க வேண்டிய நாள் நெருங்கி வருகிறது. 21-ந்தேதி தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வருவதால் அதற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் மேலிட குழு கூட்டம் டெல்லியில் நேற்று அவசரமாக கூடியது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோன்சிங் மூத்த மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வெளிநாட்டு பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கா தீர்மானம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருவதால் சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என முடிவ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இன்று அல்லது நாளை தெரியும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications