’அரசக் குழந்தையின் அபார வளர்ச்சி’ .. ஒரு இளவரசியின் பிரசவக்கால வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

பெண்ணை முழுமைப்படுத்தும் தாய்மை, ஆணை பெருமைப்படுத்தும். அரசராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் வாரிசு விஷயத்தில் எதிர்பார்ப்புகள் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் - தாய்மையின் வலியும் கூடத்தான்.

பிரசவ வலி என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி தான். இளவரசி என்பதால் குறைந்த வலியோ, மற்றெதுவோ குறையப்போவதில்லை. ஆனால் பப்ளிசிட்டி என்னவோ அதிகமா தான் இருக்கு.

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் கர்ப்பம்தான் இப்போது பெரும் பேச்சாக உள்ளது. ஆனால் வழக்கான பெண்களைப் போலத்தான் கேட் மிடில்டனும் தனது கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறார்.. அதுகுறித்த ஒரு பிளாஷ் பார்வை...

ஆணா?... பெண்ணா?

ஆணா?... பெண்ணா?

உலகமே அரியனையில் எதிர்காலத்தில் அமரப்போகும் வாரிசு ஆண் தான், பெண் தான் என்று பந்தயம் கட்டிக்கொண்டு இருக்க, கேட்டின் சாய்ஸ் ஆண் குழந்தை. ஆனால். அப்பா வில்லியம்ஸின் ஆசையோ பெண் குழந்தையாம்.

இப்படித்தான் இருக்கும்...

இப்படித்தான் இருக்கும்...

பிறக்கப் போகும் குழந்தை பார்க்க இப்படியிருக்கலாம் என வாஷிங்டனைச் சேர்ந்த தடயவியல் படைப்பாளியான ஜோ முல்லின்ஸ் என்பவர் கணனி மூலம் படமே வரைந்து இணையத்தில் உலவ விட்டுள்ளார்.

மன்னர் என்ன? இளவரசர் என்ன? மனைவிக்கு முன்னாலே...

மன்னர் என்ன? இளவரசர் என்ன? மனைவிக்கு முன்னாலே...

செயிண்ட் பாட்ரிக்ஸ் நாள் அணிவகுப்பில் கலந்து கொண்ட போது, சகதியில் சிக்கிக் கொண்டது கேட்டின் ஷூ. தன் கர்ப்பஸ்திரி மனைவிக்கு ஷூவை மீட்பதில் உதவினார் இளவரசர் - பொறுப்பான, பாசமான கணவராக.

பொம்மை மகளுக்குத்தான்...

பொம்மை மகளுக்குத்தான்...

சமீபத்தில் விழா ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட பொம்மையை, ‘தன் மகளுக்கு தரப்போவதாக' வாய் தவறி கூறிவிட்டார் கேட். இதன் மூலம் அவர் சுமந்து வருவது ஒரு குட்டி க்யூட் கேட்டை என்பதை மறைமுகமாக தெரி்ந்து கொண்டது உலகம்.

தூங்காத விழிகள் ரெண்டு...

தூங்காத விழிகள் ரெண்டு...

பிறக்கப் போகும் குழந்தையின் நினைவுகளால் கேட்டுக்கு இப்போதே இரவுகளில் உறக்கம் வருவதில்லையாம் - அன்னையின் தவிப்போ... ?

யோகா தான் பெஸ்ட்

யோகா தான் பெஸ்ட்

சுகப் பிரசவமாக என்னவெல்லாம் வழிகள் உண்டோ அதையெல்லாம் கடைப்பிடிக்கிறாராம் கேட். இதற்கா யோகா வெல்லாம் கூட செய்றாங்களாம் கேட்

பேரு, என்ன பேரு...

பேரு, என்ன பேரு...

கோடிக்கணக்கில் பந்தயம் கட்டிக்கொண்டு மக்கள் பேரை அடுக்கிக் கொண்டிருக்க, இன்னும் பேரை தேர்வு செய்யவில்லையாம் வில்லியம்ஸ் தம்பதியினர்.

ஆனால், செல்லப்பேரு ரெடி...

ஆனால், செல்லப்பேரு ரெடி...

வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையை செல்லமா, ‘எங்க செல்ல திராட்சை' (our little grape)னு கொஞ்சுறாங்களாம் கேட்டும், வில்லியம்ஸ்ஸும்.

இனிப்பு தான் கேட் சாய்ஸ்...

இனிப்பு தான் கேட் சாய்ஸ்...

விரைவில் இனிப்பான செய்தி சொல்லப்போற, கேட்டுக்கு இப்போது இனிப்பு தான் ரொம்பவே பிடிக்குதாம். சாக்லேட், பிஸ்கட், கேக் லாம் ரொம்பவே விருப்பமா சாப்பிடுறாங்களாம். டெய்லி 3000 கலோரி ஆரோக்கியமா சாப்பிடச்சோல்லி டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்களாம்.

குட்டிக்காக பெரிய வீடு...

குட்டிக்காக பெரிய வீடு...

20,000 ஏக்கர்ல இருக்கற எஸ்டேட் வீட்டுல நிறைய மாறுதல் செய்றாங்களாம், பிறக்கப் போற புதுக் குழந்தைக்காக.

உதைக்கும் ஜூனியர்...

உதைக்கும் ஜூனியர்...

அஞ்சாவது மாசத்துல இருக்கற அம்மாவை, அடி வயிற்றுக்குள் இருந்து உதைக்குதாம் குட்டி. சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துக்கறாங்க கேட்

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

ஆபத்தான விளையாட்டுகள்ல வில்ளையாடாம இருந்தாலே, கேட்டுக்கு மனபாரம் இல்லாம, ஆரோக்கியமா குழந்தை பிறக்கும்னு வில்லியம்ஸ்க்கு டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ணி இருக்காங்களாம்.

கேட் அழகு.. அதை விட அழகான குழந்தையாக வருமா குட்டிப் பாப்பா... பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+