பரமக்குடியில் பாஜக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை… பதற்றம்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் பாஜக பிரமுகருமான முருகன் என்பவரை மர்மநபர்கள் சிலர் இன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகன், இன்று காலையில் பரமக்குடியில் உள்ள முக்கிய தெருவழியே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பின்னர் கொலையாளிகள் பைப் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்து சரிந்த முருகன், சிறிது நேரத்தில் இறந்தார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ வந்து அப்பகுதியில் வெடிக்காமல் கிடந்த 2 பைப் வெடிகுண்டுகளும் கைப்பற்றினர். பின்னர் முருகனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+