தமிழகத்தில் புத்த பிட்சுக்கள் தாக்குதல் எதிரொலி: கொழும்பில் புத்த பிட்சுக்கள் ஆர்பாட்டம்
கொழும்பு: தமிழகத்திற்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் கோவிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் சென்னையிலும் புத்த பிட்சுவை விரட்டி தாக்குதல் நடத்தினர் தமிழ் ஆர்வலர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். ‘வெட்கப்படுகிறோம் இந்தியா' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை சுமந்த அவர்கள் இந்தியா வரும் புத்த பிட்சுக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே, சென்னை மற்றும் தஞ்சாவூரில் புத்த சாமியார்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் குறைப்பு
இதனிடையே தமிழகத்தில் புத்த சாமியார்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து, கொழும்பிலிருந்து, சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பாதியாக குறைத்துள்ளது.
கொழும்பு-சென்னை வழித் தடத்தில், தற்போது ஒரு வாரத்துக்கு, 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதை, 14 விமானங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications